கண்ணா எங்கே சென்றாயோ ராதை வாட
கண்ணில் காணும் யாவும் நீயே செல்ல செல்ல…
ராதே உந்தன் அழகினிலே இக்கண்ணன் ஏங்க
பாராமல் செல்வதுவோ மெல்ல மெல்ல…
மாயம் செய்து மந்திரத்தால் என்னைக் கட்ட
நியாயம் தானோ விட்டுச்செல்ல கண்ணா கண்ணா…
மாயவனாய் மங்கை உன்னை காதல் செய்ய
ஆயர் குலம் பிறந்து வந்தேன் ராதே ராதே…
பாண்டவரை காத்து நின்றாய் பார்த்தன் நண்பா
ஆண்டிடுவாய் நான் மயங்க சொக்க சொக்க…
ஆடிடுவோம் களித்திடுவோம் அன்பு பொங்க
பாடிடுவோம் மணந்திடுவோம் இன்பம் தங்க தங்க…
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com