அறப்பணிக்கு அர்ப்பணித்தத் தங்களை அரசு அரவணைக்குமா என்று கண்ணீர்க் கேள்வி எழுப்புகின்றனர் தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள்.
வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பல தனியார்ப் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.
அவர்களின் கண்ணீர்க் கேள்வி:
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்
வழங்கும் தமிழக அரசே
அரசு செய்முறை தேர்விற்கு
தனியார் பள்ளி ஆசிரியர்களை
பயன்படுத்துகின்ற தமிழக அரசே
அரசு பொதுத்தேர்வு விடைத்தாட்களை
மதிப்பிடப் பயன்படுத்தும் தமிழக அரசே
தனியார் பள்ளி மாணவர்களுக்கு
அங்கீகாரம் வழங்கும் தமிழக அரசே
அம்மாணவர்களை தயார் செய்த
ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் இல்லையா?
கொரானா காலத்தில் பள்ளிகளை
மூடிவிட்டு தனியார் பள்ளி ஆசிரியர்களின்
ஊதியக் கதவுகளையும் மூடிவிட்டீர்கள்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள்
பெரும்பாலானோர் வாடகை
வீட்டில் வாழ்கின்றவர்கள்.
வாழ்வாதாரம் பாதித்து
வாழ வழியின்றி வறுமை
வாட்ட வாடுகின்றனர்.
பள்ளிகள் திறக்கும் வரை
அரசு உதவி
வழங்கினால் மட்டுமே
தனியார் பள்ளி ஆசிரியர்கள்
வாழ முடியும்.
நாங்களும் வாழ வழிகாட்டுங்கள்.
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!