கண்ணுக்குள்ள காந்தம் வச்சு இழுக்கும் கண்மணி – என்
கரும்பு மனச புரிஞ்சுக்கிட முடியாத பொண்ணு நீ
எண்ணத்துல நீ முழுக்க இருப்பதுதான் உண்மையடி – இங்க
எதுதான் உன்னை தடுக்குதுன்னு உடனடியா சொல்லுடி
வண்ணம் ஏழு கொண்டால்தான் வானவில்லுக்கு அழகுடீ – அது
வெறும் கோடு என்றிருந்தால் மேகமாக தோணும்டீ
சின்னவளே உன் மனதால் காதல் வண்ணம் தீட்டடி – அந்த
சித்திரத்தில் என் முகத்தை சேர்த்துக் கொள்ள வேணும்டீ
மண்ணென்றால் மரம்செடிகொடி சுமப்பதுதான் நியாயம்டீ – என்
மாமன் மகள் உன்னை மணக்க ஊரும்கூடி வாழ்த்தும்டீ
உன் கழுத்தில் தாலி கட்டி கூட்டிச் செல்ல வருவேன்டீ –அதை
ஊருக்குள்ள சொல்லிடத்தான் வருது பிப்ரவரி 14 டீ
இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!