கதிரவன்

நீலக்கடலிலிருந்து தோன்றும் காலைக் கதிரவனே

மலையின் மேலே எழும் ஞாயிறே

இருளைப் போக்கி இன்பம் நல்கும் எழில் முதல்வனே

பொங்கும் ஒளியைப் புவியெங்கும் பரப்பி

உயிரினங்களையும் பயிரினங்களையும் காக்கும் ஒப்பில்லாத் தலைவனே

நின்னைப் பார்த்த பொருளெல்லாம்

ஒளி பெறுகின்றன உயிர்ப்பை அடைகின்றன

உன் வரவால் உலகம் விழிக்கின்றது இயங்குகின்றது

ஞாயிறுத் தெய்வமே நின்னை புகழ்கின்றோம்!

போற்றுகின்றோம்! வணங்குகின்றோம்!