கந்தனைக் கண்டேன் அன்பிலே அமிழ்ந்தேன்
அந்தமில்லா அண்ணலை நெஞ்சிலே சுமந்தேன்
பந்தமாய் நின்னையே என்னிலே நினைந்தேன்
நித்தமும் நான் உன்னை பாடவும் விழைந்தேன்
சண்முக நாயகா நின் முகம் காணவே
எத்திசை ஆகிலும் நின் திசை நாடுவேன்
அப்பனும் அன்னையும் மெச்சிடும் பாலகா
பக்தனாய் ஆக்கியே பூசனை கொள்ளுவாய்
கந்தனே கண்ணனின் மொய்மகிழ் சாமியே
அப்பனே சுப்பனே மெய் மறந்து ஆடுவேனே
சேவலும் மயிலும் திருக்கைவேல் போற்றியே!
ஆவலைத் தூண்டுதே மீண்டும் நின் முகம் காணவே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!