கனலி – கலை இலக்கிய இணைய இதழ்

கனலி

‘கனலி’ கலை இலக்கிய இணைய இதழ், டிசம்பர் 2019-ல் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 2021-க்குள்  பன்னிரெண்டு இதழ்கள் மட்டுமே வெளி வந்திருக்கும் இதழ். இவ்விதழ் ஆழமும் அகலமும் அடர்த்தியும் மிக்கதான தமிழின் மிக முக்கியமான இணைய மாத இதழாகும்.

மொழி பெயர்ப்பு இலக்கியங்களைக் கண்டுணர வேண்டும் என்றால், படிக்க வேண்டிய இதழ் இவ்விதழாகும். அற்புதமான மொழி பெயர்ப்புக் கட்டுரைகள், நேர்காணல்கள், தேடிப் படிக்க உகந்தவைகள் நிறைய உள்ளன.

நவீனத்தை நோக்கிய இளைஞர்களுக்கான இலக்கிய முதிர்ச்சிக்கு, முயற்சிக்கு வித்திடும் இக்காலத்திற்கான இணையதளம் கனலி இணையதளம் ஆகும்.

இந்த இணையதளத்தில் பெரும் தலைப்புகளாக படைப்புகள், மொழிபெயர்ப்புகள், சிறார் இலக்கியம், நேர்காணல்கள், சிறப்பிதழ்கள், மேலும் என்ற பகுதிகள் காணப்படுகிறன.

”படைப்புகள்” எனும் பெரும் பகுதிக்குள் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், குறும் கதைகள், குறுநாவல்கள், நாவல்கள் பகுதி தொடர்கள் என, நவீனத்தினுடைய இன்றைய வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய படைப்புகள் இங்கு அதிகமாகப் பகிரப்பட்டிருக்கின்றன.

குறிப்பாகக் குறுநாவல்கள், மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற மொழி பெயர்ப்பு நாவல்கள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன. கவிதைகளும் உலகளாவிய நவீன கோட்பாடுகளை உள்ளடக்கிய கவிதைகளாக இங்கு வெளியிடப்படுகின்றன.

பல மொழிகளில் எழுதப்படும் சிறுகதைகளை மொழிமாற்றம் செய்து இங்கு தமிழ் மக்கள் அறியச் சிறந்த கதைகளாக வெளியிடப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு எனும் தலைப்பிலும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், கதைகள் சிறந்த படைப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

இலக்கியம் எனும் பகுதியில் பாடல்கள், கதைகள், ஓவியங்கள் என்பவை குழந்தைகளுக்கான இலக்கிய மேம்பாட்டிற்காக அவைகள் வெளியிடப்படுகின்றன.

நேர்காணல்கள் பகுதியில், பல நிலைகளில் சாதனை செய்திருக்கிற சாதனையாளர்களைப் பேட்டி எடுத்து, அவற்றைச் சிறப்பான முறையில் வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள்.

குறிப்பாக தி.ஜானகிராமன் மகள், கவிஞர் மோகனரங்கன் போன்று அறியப்பட வேண்டிய படைப்பாளர்கள், கலைஞர்கள் இங்கு நேர்காணலின் மூலம் தன் திறனைப் பிறருக்குப் பகிர்ந்து இருக்கிறார்கள்.

சிறப்பிதழ்கள் எனும் பகுதியில், ஜப்பானிய மொழியில் ஒரு சிறப்பு இதழும், தி.ஜா சிறப்பிதழ் ஒன்றும் ஒரு இதழும் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜப்பானிய மொழியில் காணலாகும் மிகச்சிறந்த படைப்பாளர்களை அறிந்து கொள்ள, ஜப்பானிய சிறப்பிதழ் ஒரு முக்கியமான இணையதளப் பதிவாகும். மேலும் எனும் பகுதியில் நுண்கலைகள், குறித்தான கட்டுரைகளும், படைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

நூல் விமர்சனம், கடித இலக்கியம், பெட்டகம், சிற்றிதழ்கள் பக்கம், கடந்த இதழ்கள், அறிவிப்புகள், காணொளிகள், சமகால இலக்கியங்கள் என்பவை இங்கு தனித்தனிப் பக்கங்களில் வடிவமைக்கப்பட்டு, படைப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. சமகால இலக்கியங்கள் எனும் பகுதிக்குள் பலரது படைப்புகள் அலசி ஆராயப்பட்டு இருக்கின்றன.

கனலி ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிட்டும், மொழி பெயரப்பின் முக்கியத்துவம் கருதி, தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகள் வெளியிட்டும், முன்னோக்கிய சிந்தனையில் இந்த இணையதளம் செயல்பட்டு வருவது சிறப்பாகும்.

புதிய சிந்தனைகளும் கருத்துக்களும் படைப்பாக்கங்களில் போதிய வல்லமை இருந்தும், கலை இலக்கிய உலகில் அறிமுகமாக இயலாத இளம் படைப்பாளிகளுக்கான களமாகவும் கனலி இருக்கிறது.

பிற‌ மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கும், தமிழ்மொழிப் படைப்புக்களை பிற‌ மொழிகளுக்கும் மொழிபெயர்த்து, அதன் வாயிலாக அறிமுகப்படுத்தும் இணைப்பு பாலமாக இத்தளம் செயல்படுவது பாரட்டத்தக்கதாகும்.

இத்தளத்தை அணுக www.kanali.in சொடுக்கியைச் சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

Comments

“கனலி – கலை இலக்கிய இணைய இதழ்” அதற்கு 3 மறுமொழிகள்

  1. DR.T.RAJIVI GANDHI

    அருமை ஐயா

  2. த.பரிமளா

    இணையம் அறிவோமா எனும் கட்டுரையில் பெயரளவில் மட்டும் அல்லாமல் உண்மையாகவே இணையத்தை அறிய செய்யும் அய்யா முனைவர் சந்திரசேகரன் அவர்களுக்கு நன்றிகள்.

  3. ப. கலைச்செல்வன்

    ஒரு இதழ் இன்னொரு இதழை அறிமுகம் செய்வது பாராட்டுக்குரியது.

    ஏனெனில் இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் முயற்சி அது.

    கட்டுரை அருமை.

    கனலி- யை வாசிப்போம்.

    வாழ்த்துக்களுடன்.