ஊர் தோறும் ஆறு இருந்தது
ஆற்றங்கரையோ நீண்டிருந்தது
மறுபுறம் கண்மாய் நிறைந்திருந்தது
வாழ்வோ நீரால் சூழ்ந்திருந்தது
வீடுகள் தோறும் கால்நடை இருந்தது
வாசல்கள் சாணிப்பாலால் மணந்திருந்திருந்தது
சேவல்கள் கூவிட பொழுது விடிந்தது
ஆலய மணியோசையும் அங்கே மாலையில் கேட்டது
மனித மனங்களில் மகிழ்ச்சி இருந்தது
சுயநலம் உணர்வோ இல்லாதிருந்தது
இப்படியாக இருந்த நீர்நிலை
இன்று மெல்ல கரைந்து போனது
காசுக்கு நீர் என்ற நிலையும் ஆனது
காற்றும் அதுபோல் ஆகப்போகுது
நீரையும் காற்றையும் காத்திட மறந்தால்
நல்வாழ்வும் கனவாய் ஆகப்போகுது
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942