“கனவு காண்” வாசகம் சுவாசமானது
கனவு காண தூக்கம் தவிர்த்தேன்
கனவு பலிக்க தூக்கம் துறந்தேன்
“நிலவைக் குறி வை நட்சத்திரம் கிட்டும்”
இதையும் செய்தேன்
நிலவு கிடைக்கவில்லை
நட்சத்திரம் தட்டும்போல் இருந்தது
பேராசிரியர்தான் ஆகவேண்டும்
பரவாயில்லை
பள்ளி ஆசிரியர் தேர்வுக்கு வந்தேன்
கேள்வியோடு இன்னொன்றும் கேட்டார்கள்
நட்சத்திரமும் நழுவிப்போனது !
கனவுச் சிறகுகள் கருக கண் விழித்தெழுந்தேன்
அய்யய்யோ !!!
கனவு காண செலவிட்ட நேரத்தில்
கொஞ்சம் காசும் சேர்த்திருக்கலாமோ!
பத்மினி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!