கனவின் மொழி

கனவின் மொழி

மெய் மறக்கும் உறக்க நிலையில்

மையிருட்டில் ஒரு கருப்பு வெள்ளை படம்

சில நேரம் களிப்பூட்டி சிரிக்க வைக்கும்

சில நேரம் அச்சுறுத்தி அழவும் வைக்கும்

அருகில் உறங்குபவன் ஆறடி மனிதனானாலும்

கடும் அச்சத்தில் திகைத்திடுவான்

திரைமூடி விழிபிடித்த படங்கள் அனைத்தும்

சிந்தையில் படிந்த சிதிலப் படமே

ஆழ்மனதில் அடித்தளமிட்ட ஆசைகள்

அனைத்தும் நித்திரையில் அரங்கேற்றும்

ஒளிப்பதிவு செய்யவியலா குறும்படம்

பல கனவுகளை நிஜமாக எண்ணி வாழ்வதும்

பல நிஜங்களை கனவாக எண்ணி மறப்பதும்

இங்கு பலரது வாழ்வின் வழக்கே

வாய்பேசவியலா வாஞ்சை மனிதனும்

உணரும் உணர்வின் மொழி ~

இந்த கனவின் மொழி

க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353

Comments

“கனவின் மொழி” மீது ஒரு மறுமொழி

  1. Silambarasan. J

    Super

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.