கனவில் வந்த கண்ணதாசன் – கவிதை

கண்ணதாசன் கனவில் வந்து
என்னை அழைத்தான் – நான்
பண்ணெழுத பக்குவமாய்
சொல்லிக் கொடுத்தான்!

எதுகையோடு மோனை கொண்டு
சந்தம் தொடுத்தான்-அதில்
புதுமை பல சங்கதியாய்
பூட்டிக் கொடுத்தான்!

காதல் எனும் சொல்லழகைக்
காட்டிச் சிரித்தான் – ‍‍அது
வேதம் போல வாழுமெனப்
போட்டு உடைத்தான்!

மனம் கொண்டு நினை என்னை
மறுநிமிடம் வருவேன் என்றான் – நல்ல
கனவு அது கலைந்து விட
எங்கோ சென்றான்!

க.சிந்து
சென்னை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.