கனவில்
உறங்கும்பொழுது கனவில் மட்டும் வரும் என் இனியவளே!
கண் விழித்தால் காணாமல் போகின்றாய் – எனவே
கண் விழிக்காமல் இருந்தேன் எழுப்பப் பார்த்த
என் வீட்டு மக்கள் அறியாமையால்
என்னையே சமாதியில் வைத்து விட்டனர்
அடி என்னவளே! விழித்த பின் தான் தெரிந்தது
நீ கருவிலே அழிந்து விட்டாய்! ஆம் உன்னைத் தேடி
என் காதலை சொல்லும் முன்பே
என்னை சமாதியாக்கி விட்டார்கள் கல்லறையில்!
–சுருதி
கடிதம் செய்த புண்ணியம்
20 வருடங்களாய் தூங்கிய நான்
20ம் நம்பர்க்கு குடி வந்த பெண்ணை கண்டவுடன் தான் விழித்தேன்
மணிக்கணக்கை வேஸ்ட் செய்யும் நான்
மணித்துளியைக் கூட வேஸ்ட் செய்ய விரும்பவில்லை
கண்ணாடி முன் நின்றறியா என் பாதங்கள்
மணிக்கணக்கில் நின்றதன் காரணம் – நீ
விரும்பும் ஹேர் ஸ்டைலைப் பார்க்க ரசிக்க!
பார்த்து பார்த்து எழுதிய கடிதம்
ஒரே நிமிடத்தில் நீ பார்த்து கிழித்து விட்டாய்
என் அன்பே! இது போதும் எனக்கு
நான் புண்ணியம் செய்து விட்டேன்!
எவ்வாறு என்கிறாயா?
என் அசிங்கமான கையெழுத்தை பார்க்காமலே வெறுத்து
மார்க் போடாத ஆசிரியர் ஒரு புறம் இருக்க
நீ படித்து பார்த்து கிழித்ததால் தான்!
–சுருதி
வாக்கெடுப்புத் திருவிழா
நகரத்தில் வாக்கெடுப்பு
வீதியெங்கும் பளபளப்பு
பண்டிகையில் கூட ஒற்றுமையடையாத மனிதன்
ஒற்றுமையாய் வரவேற்பான் நாட்டியக்காரியை
சீரியல் பல்பு கட்டாமலே
அழகாக்கும் (நடிகை) அழகி – இதை
பார்த்து பார்த்து பழகிய மனிதா!
சிந்தித்து ஓட்டுப் போடுவதை விடுத்து
யாருக்கு போடவென விதிர்க்கிறாய்
படிக்காமல் தேர்வுக்குச் செல்லும்
மாணவன் போல் சென்று
கண்ணை மூடி ஒன்றைத் தொடுவது போல
கண்ணிருந்தும் மூடனாய் ஏன் நடக்கிறாய்?
–சுருதி
வாழ்க்கைக(ல்)ள்
வாயெல்லாம் இருக்கும் ‘பல்’
வாழ்க்கையில் ஏற்படும் ‘தடைக்கல்’
தலையில் இருக்கும் ‘வழுக்கல்’
மனதில் இருக்கும் ‘நசுக்கல்’
துக்கம் தாங்காமல் வரும் ‘விக்கல்’
இறுதியில் வரும் சவப் பெட்டியில் ‘உப்புக் கல்”
–சுருதி