கனவே கலையாதே!

கத்தும் குரலோசையில்
காணாமல் போகும் குழலோசை

கொஞ்சும் குழலசைவில்
நெஞ்சம் காதலைக் கொஞ்சும்

கொஞ்சும் வஞ்சியர்தம்
நெஞ்சம் குழறும்

கெஞ்சும் காளைகள்தாம்
பிஞ்சில் வெம்பும்

கம்பொன்றைக் கண்டிட்டால்
வம்பெதுவும் வேண்டாமென

கத்தும் குரலோசையில்
காணாமல் போகும் களவோசை

அரற்றி விழுந்து எழுந்து ஓட
அம்மிக்கல்லும் பல்லைக்காட்டி
விம்மி விம்மி கேட்டது

எத்தனை முறைதான் என் மீது
ஏற்றுவாய் உன்னவள் பாதங்களை

சுகன்யா முத்துசாமி

தந்தையுடன் சுகன்யா முத்துசாமி
தந்தையுடன் சுகன்யா முத்துசாமி