துறைமுகத்தில் நின்றது ஒரு கப்பல்
மேல் தளத்தில் நவதானியங்களின் சிதறல்
அன்றாடம் பசியாறின புறாக்கள் கூட்டம்
பசிப்பஞ்சம் நீங்கின மனதளவில் மகிழ்வு
கப்பல் தன் பயணம் தொடர்ந்திடும் நேரம்
சுற்றம் மறந்து கிடந்தது புறாக்கூட்டம்
அலையாமல் திரியாமல் கிடைத்தது உணவு
அலைகள் தாண்டிக் கப்பல் கடந்தது தொலைவு
தானியங்கள் ஒருநாள் காலியாய்ப் போயின
தரைக்குத் திரும்ப புறாக்கள் பறந்தன
தரைப்பகுதி கண்களுக்குத் தெரியவில்லை
தண்ணீர் சுற்றிலுமாக சூழ்ந்திருந்தது
மீண்டும் கப்பலுக்கு வரலாமென நினைத்தன
கப்பல் தொலைதூரம் பயணப்பட்டது
தரைக்கும் கப்பலுக்கும் வழி தெரியாத புறாக்கள்
வானத்தில் பறந்தபடி களைத்து மடிந்தன
கவிக்கோ இரா.சீ.பாலகுமார்
கைபேசி: 9283182955