அண்டவெளியின் அகன்ற வெற்றிடமாய்
இயற்பியலை இடம் மாற்றி போட்டு
பிரபஞ்ச ரகசியமாய் பிரதிபலிக்கிறது
கருந்துளையின் கண் சிமிட்டல்கள்
கொடூர பிம்பங்களாய்!
எதிர்கொள்பவைகளை உரிந்து
விருந்தாக்கி கொள்கிறது
எதையும் விட்டு வைக்காது
எறும்புத் தின்னியென விரிந்த
வாய்கொண்டு அவை
ஒளி வேகத்தை மிஞ்ச முடியாது
யாதொரு பயணமும் கருந்துளையின்
கண்களில் விரல் நீட்ட வல்லதல்ல
ஈர்ப்பு விதிகளில்
பால்வெளி அண்ட செயல்பாடுகளில்
பங்களிப்புண்டெனிலும் சூத்திரம் மாறுதலாகின்
சூரியனையும் சுருக்குப்பையில் இறுக்கிக் கொள்ளும்
இந்த கிறுக்கு கருந்துளைகள்
கருங்குழிகளாய்!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!