கர்த்தர் என்றும் அல்லா என்றும்
கண்டபடி கத்தாதீங்க
மொத்தத்தில் எல்லாமே ஒன்னுதான்; அத
முழுசா நீ மாத்திடாத மண்ணாத்தான்
ஆலகால விஷம் குடிச்சவணும்
சிலுவையில் அடிபட்டவனும்
அர்த்தநாரி என்றவனும்
அல்லா ரஹீம் என்பவனும்
மொத்தத்தில் எல்லாமே ஒன்னுதான்; அத
முழுசா நீ மாத்திடாத மண்ணாத்தான்
காவித் துணி கட்டினாலும்
கையில் சிலுவை ஏந்தினாலும்
கூவிக்கூவி தொழுதிட்டாலும்
மொத்தத்தில் எல்லாமே ஒன்னுதான்; அத
முழுசா நீ மாத்திடாத மண்ணாத்தான்
காத்தவராயண்ணாலும் கண்ணபிரான் என்றானாலும்
ஆத்தாடி மாரி மேரி ஆனாலும்
கையெடுத்து வணங்கினாலே போதுமாம்
கண்ணில் வெறிகாட்டாதே மோட்சம் கிட்டாதே
கண்ணில் வெறி காட்டாதே உனக்கு மோட்சம் கிட்டாதே
கைபேசி: 9865802942
I salute you Mr.Murugesan