விதைத்தது அவரையென்றால்
விளைந்தது துவரையாயிராது
விண்ணை நோக்கி நீர் ஆவியாய் செல்வதும்
மண்ணை நோக்கி நீர் வீழ்வதும் வினைப்பயனே
மதியிழந்து பிறர் மனதை நாம் கொன்றால்
சதியின் பிடியில் மதியும் சிக்கி
மரணம் தீண்டுமுன் நம்
மனதை பிறர் கொல்வதும் வினைப்பயனே
கோவலன் கொல்லனால் சிக்குண்டு
கொலைகளப்பட்டதும் வினைப்பயனே
பிறருக்கு நாம் செய்யும் நன்மையும் தீமையும்
நாணேறிய அம்பினைப் போன்றே
பின்னோக்கி செல்லும் வரை
முன்னோக்கி செல்வதும் வினைப்பயனே
பிறரறியாமல் பின் பள்ளத்தில் தள்ள
நாம் குழிபறித்தால் நாமறியாமல் நம்மை
பள்ளத்திலல்ல பாதாளத்தில் தள்ள
பிறர் குழிபறிப்பதும் வினைப்பயனே
தலைமுறைக்குள்ளும் வினைபுரியும்
தலைமுறை தாண்டியும் வினைபுரியும்
இந்த வினைப்பயன்
மனதாலும் யூகிக்கவியலா மர்மம் இந்த கர்மா
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353