கற்றார் உயர்பெறுவர்!

கற்றார் உயர்பெறுவர்
என்றும் நிலைபெறுவர்

உற்றார் உறுதுணையார்
யாவரும் கூடிடுவர்

ஏற்றம் உறுதியன்றோ
வாழ்வில் மகிழ்ந்திடுவர்

கற்றுத் தெளிவதினால்
உண்மை அறிந்திடுவர்

சிறக்கும் உழைப்பதினால்
பாரில் உயர்ந்திடுவர்

திறக்கும் வழியமையும்
துன்பம் மறந்திடுவர்

பிறக்கும் சுடரொளியே
இன்பம் அடைபவரே!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்