மணலாடை உடுத்தி
ஓடும் நீரில்
சலனமின்றிப் பார்க்க
பிரமிக்க வைக்கிறது
நதியின் அழகு…
என்னைக் காட்டும் அது
தன்னைப் பார்த்துக் கொள்வதில்லை
ரசிக்கும் கரைகளும்
கரை அமர்ந்த நிழல் மரங்களும்…
அப்போதைக்கப்போது
தன்னைப் பார்த்துச் சிலிர்த்துக் கொள்ளும்
சிறகசைத்தப் பறவைகள்…
கால்நடைகளின் தாகம்
தணித்தாலும்
புரண்டு நெளிந்து தவழும் நதி…
தாய்மடி தழுவி
ஆனந்தப்படுகிறது நதி மடியில்
முகில் சுமந்த மேகம்…
பகலில் சூரியனும்
இரவில் நிலாவும் தம்மைத் தாம்
அலங்கரித்துக் கொண்டு
பவனி வருவதே அலாதி அழகு…
வயல்வெளி உழவர்களுக்கு
அகத் தாகத்தையும்
புறத்தில் உடலையும்
அரவணைத்து மகிழும் நதி
கழிவுகள் கலக்கும் போதுதான்
கலக்கம் கொள்கிறது…
கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!