இமைகள் மூடித் திறந்தேன்
என் விழிகளுக்குள் நீ
சிக்கிக் கொண்டாய்!
உதடுகள் மூடித் திறந்து
உன் பெயர் உச்சரித்தேன்
என் இதயத்திற்குள்
நீ உட்கார்ந்து கொண்டாய்!
மூக்கின் வழியே
மூச்சுக் காற்றாய் நுழைந்து
நுரையீரலை வியாபித்துக்
கொண்டாய்!
இனிமேல் நீ
என்னை விட்டு எங்கே
சென்றாலென்ன?
என்னுள் நீ கலந்த பின்னே
உன்னுடன் தானே
வருவேன் நானும்!
ரோகிணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!