கலர் கனவுகள்

கலர் கலரா கொடிகள் இங்க பறக்குது பாரு ‍- அது
காதுகளில் நமக்கு பூவ சுத்துது பாரு
பலப்பலவா கட்சிகளும் இருக்குது பாரு – அது
பம்பரமா நம்மை ஆட்டி வைக்குது பாரு

சின்னஞ்சிறு பசங்ககூட கட்சி அமைத்திட – இங்க‌
சினிமாவே காரணமா ஆகிப் போச்சுது
ஒன்று ரெண்டு மூணு நாலா பிரிஞ்சி போகுது – கட்சி
ஒவ்வொன்னும் சாதிச்சாயம் பூசிக் கொள்ளுது

அச்சு அச்சா வார்த்தைகளை அள்ளி வீசியே – இங்க‌
ஆளுகள மயக்கி அது ஆட்டம் போடுது
சச்சரவும் சண்டையுமே வளர்ந்து போச்சுது – இங்க‌
சண்டியர் கூட்டம் கொஞ்சம் பெருகிப் போச்சுது

உச்சியில் வெயிலடிக்க உழுத கதை மறந்துடிச்சி – இங்க‌
ஊருக்குள்ள அரசியலே பொழப்பாக மாறிடிச்சி
நிச்சயமா இது நாட்டை வளர்க்காது புரிஞ்சிடிச்சி – இப்ப‌
நேசம் அன்பு காதலெல்லாம் கனவாகிப் போயிரிச்சி

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.