வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளை பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை
சரியாசனம் வைத்த தாய்
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்