இரண்டு பேருக்கு நடுவில் கல்வி பெரிதா செல்வம் பெரிதா என விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கேள்வியாளர்: கல்வி பெரிசா? செல்வம் பெரிசா?
பதிலாளர்: ரெண்டுந்தான்!
கேள்வியாளர்: அப்படியா சரி…. உங்க பாக்கெட்ல ஒரு ரூபாயாச்சும் இருக்கா???
பதிலாளர்: நூறு ரூபாயே இருக்கு, அதுக்கென்ன?
கேள்வியாளர்: ஏன்யா, உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா????
பதிலாளர்: சார் வார்த்தையை அளந்து பேசுங்க.. அப்புறம் நானும் திருப்பிக் கேப்பேன்…. தாங்க மாட்டீங்க…
கேள்வியாளர்: பாத்ததீங்களா, பணம் இருக்கான்னு கேட்டப்ப வராத கோபம் அறிவிருக்கான்னு கேட்டதும் எவ்வளவு வந்துச்சு…. இப்ப சொல்லுங்க.. பணம் பெருசா?? … அறிவு பெருசா???