மழை இருட்டுக்
குடையின் கீழ்
மல்லாந்து படுத்து
எண்ணக்குதிரையை
தட்டிய போது…
கருநாகப்பின்னல்
அங்கும் இங்குமாய்
பின்னாலாட
வெண்சங்கு மின்னலிடை
இடதும் வலதுமாய்
சதிராட…
மியாவ் பூனைநடை
போட்டு மெதுவாக வந்து
கானல் நீர்காரிகை
கண் பொத்த…
சிலீரென்று மழைத்துளி
என்னை முத்தமிட
சிலிர்த்துக்கொண்டு
எழும்போது…
கண் பொத்திய
கானல் நீர் காரிகை
கரைந்தோடினாள்
மழை நீரில்…
என் களவு கனவெண்ணி
கண்ணீர் விடுகிறதோ
கார் மேகங்கள்?
ரோகிணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!