வானத்து உச்சியில்
வலம் போன கழுகுகின்
இறகில் பிரிந்த ஒற்றைச் சிறகு நான்…
வெட்ட வெளியில்
வீசிய காற்றின் விரல்கள் தொட்டு
விளையாடி தவழ்ந்து
அடர்ந்த மரத்தின்
இலையின் மடியில்
இளைப்பாறி மகிழ்ந்தேன்
இரவுப் பனியில்
சிறகு நான் நனைய
இலையோ என்னை மெல்ல எழுப்ப
மீண்டும் பயணம் …
மண்ணில் விழுந்தேன்
வழியில் வந்த அழகுப் பெண்ணிவள்
மெல்ல எடுத்தாள்
முத்தம் கொடுத்தாள்
உச்சியில் என்னை
சூடிக்கொண்டாள்!
உடலோ மனதோ (பளுவில்லாது)
இலகுவாய் இருக்க…
உதிர்ந்தே போயினும்
உயரே இருப்போம்!
கைபேசி: 9865802942