காரீருள் சூழ கலக்கம் இருந்தாலும்
கயவரை கண்டு அஞ்சாதே கவனம் கொள்
கயவனின் கலகம் இருந்தாலும் கலங்காதே கர்ஜனை கொள்
கண் கலங்க கண்ணீர் வீழ்ந்தாலும் நீ வீழாதே
கவனம் கொள் கர்வம் கொள் கரஜனை கொள் – கயவனும்
கலக்கம் அடைவான் உனைக் கண்டு
சிரம் தாழ்ந்தாலும் கரம் ஏந்தாதே
இமை வீழ்ந்தாலும் புருவம் உயர்த்து
கணப்பொழுது போதும் நிலை மாற! மறவாதே
கவலை வேண்டாம்
தன்னிலை உணர்ந்து கர்ஜனை செய் மனமே
நீ மட்டுமே உனை அறிவாய்
உனை நீயே வென்றெடு – வென்றால்
உனை வெல்ல எந்த வல்லவனுமில்லை
நினை மனமே
இதுவே நித்தம் நிரந்தரம்
உலகைக் கூட உன் கரத்தினுள் அடக்கலாம்
கவனம் கொள் கர்வம் கொள் கர்ஜனை செய் மனமே

அ.சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
மருந்தியல் கல்லூரி
8438574188