வெண்சுருட்டு வரைந்த ஓவிய வானில்
கவலைப் பறவைகள் பறந்து போவதாய்
கண்மூடி மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறது
மனம் அதன் சிறகுகளை …
லட்சக்கணக்கான ராட்சச குழந்தைகள்
ஜெனித்துக் கொண்டிருக்கிறது
அந்த வானில் யாருக்கும் தெரியாதபடி
கடந்து போகையில் ஒவ்வொரு நாசியிலும்
தார்மீகத் தனமாய் குடியேறிக் கொள்கிறது
அனுமதி கேட்காமலேயே அது
வெள்ளைக்கொடியுடன் வெளியேறியவைகள்
அல்லாது மறுத்தவைகள் யாவும்
வஞ்சகமாய் நெஞ்சுக் கூட்டை
தின்று தீர்த்து விடுகிறது
நினைவு கொள்க
புகைவது ஓர்நாள் எரியும் என்பதை!
நினைவு கொள்ளாத போது?

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250