துறந்திடு துறந்திடு
கவலையைத் துறந்திடு
திறந்திடு திறந்திடு
நம்பிக்கைக் கதவைத் திறந்திடு
மறந்திடு மறந்திடு
தோல்வியை மறந்திடு
வளர்ந்திடு வளர்ந்திடு
திறமையாய் வளர்ந்திடு
விரைந்திடு விரைந்திடு
முயற்சிக்க விரைந்திடு
உயர்ந்திடு உயர்ந்திடு
மலைபோல் உயர்ந்திடு
உணர்ந்திடு உணர்ந்திடு
உன்னைநீயே உணர்ந்திடு
பறந்திடு பறந்திடு
வெற்றி வானில் பறந்திடு
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
மறுமொழி இடவும்