என் மனம்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
நான் புரிந்து கொண்டேன்
இன்னும் நான்
நம்பிக்கையுடன் இருக்கிறேன்
அதற்கான வார்த்தைகளைத் தேட
நான் எழுதப் போகும்
கவிதையால் கட்டளை இடப்பட்டிருக்கிறேன்
எனது தலையின் வலதுபுறத்தில்
இருக்கும் பலகையில்
நான் எழுதுகிறேன்
இன்னும் நான் காத்திருக்கிறேன்
அடர்ந்த காட்டுக்குள் திரியும்
சிறுவனைப் போல்
முன்பே எழுதப்பட்ட
கவிதையின் வரிகளை
படிக்க முடியாமல்
கண்களைக் கசக்கிக் கொள்கிறேன்
கவிதை பற்றிய நினைவு
நான் சிந்திப்பதற்கான
இடத்தை எனக்குக் கொடுத்தது
இன்னும் நான் எழுத
அது காத்துக் கொண்டிருப்பதை
நான் அறிவேன்
மறுமொழி இடவும்