கவிதை மனம்

எழுதி வைத்ததை வாசிக்கின்றேன் – அந்த

எழுத்துக்கள் ஒளிவிட நேசிக்கின்றேன்

பழுதில்லா வார்த்தைகள் சுமக்கிறேன் – காதல்

பாவை அவள் மடி துயில்கிறேன்

மெழுகென உருகிடும் வார்த்தைகள் – அதில்

மெல்ல உருகியே கரைகிறேன்

தழுவிடும் தாய்மடி போலவே – கவிதை

தேவதை அவள் மடி துயில்கிறேன்

பொழுதுகள் போவதை மறக்கின்றேன் – பெரும்

போதையில் நானும் மிதக்கிறேன்

எழுகின்ற பாடலின் நடையிலே – வார்த்தை

நடனத்தை கண்டு மகிழ்கிறேன்

கழுகென விண்ணிலே பறக்கின்றேன் – கவிதை

கனலினில் விறகென எரிகிறேன்

விழுகின்ற சூரிய ஒளியிலே

வெடித்திடும் பாடலாய் சிதறுகின்றேன்

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.