காகிதப் பெண்ணே வாயேண்டி
கவிதை தந்து போயேண்டி
பாவிமக உன்னைக் காணாம
பரிதவித்து நிக்கேண்டி
போகிற போக்கில் என்மனதில்
காட்சியாய் காதலை சொல்லேண்டி
போதாது என்று நான் கேட்க
புதுவார்த்தைகள் கொண்டு வாயேண்டி
பாகினில் விழுந்த முக்கனியோ
பாலுடன் சேர்ந்த தேன்சுவையோ
பைந்தமிழ் பாட்டின் சொல்லமுதோ
பார்வையில் காணும் காட்சிகளோ
எகிறும் வாழ்வின் இந்நொடியில்
ஏற்றிடும் நல்லறிவை தந்தவள் நீ
போதி மரத்தடி புத்தனுக்கு
தந்தது என்னென்று சொன்னவள் நீ
போகிற போக்கில் காலம் காலமாய்
கதையும் பாட்டும் காப்பவள் நீ
ஆதியிலிருந்து மனித குலத்தின்
அசைவையெல்லாம் சொன்னவள் நீ
அம்மாடி எனக்கு ஒரு கவிதை
தந்திட இப்போது வந்திடு நீ
வேகிற வெயிலின் சூரியனோ
வெண்ணிலா அவளின் தன்குளிரோ
கோகிலம் பாடிடும் மெல்லிசையோ
கோலமயிலவள் நாட்டியமோ
மோதி விளைந்திடும் வார்த்தைகளில்
மெல்லிய கவிதை தந்திடு நீ
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!