தின்று தீர்த்த சுண்டலின் காகிதம் பேசியது…
நீளவாக்கில்
குறுக்குவாக்கில்
உருவம் கொண்டு
உழன்று அச்சேறி
விலைமதிப்பற்ற
எண்ணங்களைக்
கதையாய்
கட்டுரையாய்
கவிதையாய்
கணக்காய்
எழுத்தாய்
எண்ணாய் நினைத்து
புத்தகமாய் அச்சேறி
புறப்பட்டு விலையாகி
வாங்கி படித்தபின்
குறுகுறுப்பு இல்லாமல்
குறைந்த விலையில்
பொட்டலங்களாய்
சுண்டலிருந்து…
சுகமாய் தின்று தீர்த்த
பின் காகிதம் சொல்லும் கதைகள் கணக்கிலடங்கா…
தின்று தீர்த்த சுண்டலின் காகிதம் பேசியது…
தீராத தாகம்…
எழுத்துலகப் பிரம்மாக்கள்
படைத்த காவியங்கள் கடைசியில்…
டி.மங்களம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!