முந்திரிகாட்டுக்கும் சந்தனக்காட்டுக்கும் போட்டியாம்
முதலில் மானு பந்தடிக்கும் காட்சியாம்
முந்திரி காட்டுக்கு சிங்கம்தானே கேப்டனாம்
முள்ளம்பன்னி அவங்க டீம் கீப்பராம்
சந்தனக்காட்டுக்கு சிறுத்தையண்ணா கேப்டனாம்
சங்குநிற முயலு அவங்க கீப்பராம்
சின்னயானை போட்ட பந்து சுழலுதாம்
சிக்சருக்கு மானு தூக்கி அடிச்சதாம்
கன்னங்கருத்த யானை மீண்டும் போட்டதாம்
கண்டபடி மானு அடிக்க பார்க்குதாம்
சின்னபந்து வானத்துல பறக்குதாம்
சிவிங்கி அதை லாவகமா பிடிச்சதாம்
குள்ளநரி நடுவர் அவுட் கொடுக்கல
குதிச்சு முயலு அதனைப் பார்த்து முறைக்குது
மெல்லநரி முயலைப் பார்த்து மிரட்டுது
மொத்ததுல ஒன்சைடா போகுது
வெள்ளை மேகம் அதனைக் கண்டு கறுத்தது
வேகமாக மண்ணில் மழையைப் பொழிந்தது
கள்ளத்தனம் கொண்ட ஆட்டம் நின்றது
காட்டுக்குள்ள அமைதி மீண்டும் வந்தது.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)