சுள்ளென்று அடிக்கும் வெயிலில
சூரியன் வந்தது நடுவுல
வெள்ளம் போல இந்த ஆத்துல
வழியுது தண்ணி ஓரத்தில!
அள்ளி எடுக்கும் மணலில
அடியில் சுரக்கும் ஊத்துல
துள்ளி விழுந்து குளிச்சிட
தோணுதடி இப்ப மனசுல!
வெள்ளரிப்பிஞ்சு கரையில
விளைஞ்ச பழம் மறைவுல
முள்ளோட இலந்தை செடிகளே
மொத்தமா நிக்குது வேலிபோல!
வெள்ளரி வாசனை இழுக்குது
விடலை ஆடு தவிக்குது!
கள்ளத்தனம் கொண்ட சின்ன நரி
காத்துகிடக்குது ஆட்டுக்கென்று!
செல்லாதே நீயும் வெள்ளாடே
செத்து மடிந்து போகாதே!
குள்ளநரிக்கூட்டம் அங்கிருக்கு
கொஞ்சம் கவனம் வேணுமடி!
உள்ள படியிந்த காட்சியெல்லாம்
உண்மையில நடக்கும்
காட்டுக்குள்ள!
பிள்ளைகளே நீங்க வந்திடணும்!
பெரும் மகிழ்ச்சியை
கொண்டாடிடனும்!
கைபேசி: 9865802942