உன் கண்ணால் தூங்கிக்கொள்ள அனுமதிப்பாயா?
உன் நெஞ்சில்நான் சாய்ந்துகொள்ள இடம் தருவாயா?
உன் குரலில் என் வார்த்தை ஏற்றிக்கொள்வாயா?
உன் காலடி ஓசையில் என் மூச்சை வைப்பாயா?
சின்னவளே உன் சிரிப்பில் என்னைக் கரைப்பாயா?
செந்தூர நெற்றி பொட்டில் என்னைப் புதைப்பாயா?
கண்ணக்குழி கிண்ணத்துல என்னை மறைப்பாயா?
கருங்கூந்தல் காட்டில் வைத்து என்னை காப்பாயா?
வண்ணமில்லா என் வாழ்வில் வான வில்லாய் வருவாயா?
வெண்மேகம் என்னைத்தொடும் வெண்ணிலவும் நீதானா?
என்னவனே என்றும் என் காவல் நீ தானா?
இன்று என் காதலினை ஏற்றுக் கொள்வாயா?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942