என் கரத்தோடு உன் கரம் கோர்த்து
சாலையில் நடந்து கதைக்க
மாட்டோமா என்று
இருவரும் எதிர்எதிரே அமர்ந்து
உண்ணுகையில் உன் உணவை
எனக்கு ஊட்டிவிட மாட்டாயோ என்று
வாகனத்தில் நாம் இலக்கறியாமல்
பயணிக்கையில் என் முதுகில்
சாய்ந்து இதயத்துடிப்பை கேட்க
மாட்டாயா என்று
உயர்தகு திரையரங்கில் திரைப்படம்
காண்கையில் அதிர்ச்சி முத்தம்தர
மாட்டாயா என்று
வெள்ளிக் கிழமை முருகன் கோவில்
செல்லுகையில் எனக்கும் நெற்றியில்
திருநீறு பூச மாட்டாயா என்று
மழையில் நினைவோம் வா என்று
அடம்பிடிக்க மாட்டாயா என்று
நனைந்தபின் தலைதுவட்டி விட
மாட்டாயா என்று
டிசம்பர் மாத குளிருக்கு என்னை
கட்டிக்கொள்ள ஆணையிட
மாட்டாயா என்று
நீ நினைவில் மட்டும் அல்லாது
நிஜத்திலும் என்னுடன் வாழ
வேண்டும் என்று
க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768