மது தரும் போதை உந்தன் கண்ணில் மின்ன – இரவு
மலர் தரும் வாசனையோ உன் முன்னே தோற்க
மெதுவாக எந்தன் நெஞ்சில் காயம் தர – உன்
மெல்லிய இடையொன்றே போதுமடி
எதுகைக்கு மோனை போல நீயும் நானும் – வாழ
எழுகின்ற மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை
குதூகலம் வாழ்வுதனில் கொப்பளிக்க – உன்
கரம்கோர்க்கும் காலம் எப்போ வருமோடி
புதுவெள்ளம் பாயுதடி அந்தப் பக்கம் – காதல்
பூப்பூக்க என்ன தடை இந்தப் பக்கம்
எதுவோ நீ சொன்னாலும் அதுவே வேதம் – அடி
ஏனிந்த பார்வையடி எந்தன் மீதோ
ஒரு விரலினை நீ நீட்டினால் போதும்
உலகம் உன் காலடியில் வீழும்
புன்முறுவல் ஒன்றை நீ முகிழ்ந்தால் போதும்
முத்தமிமழும் உனக்கு முத்தம் கொடுக்கும்
வேல் விழிப்பார்வை நீ வீசினால் போதும்
விண்ணும் மண்ணும் பொன்னாய் மின்னும்
எனக் காதல் கவிதைகள் எழுதிய பேனா
இப்போது மகள்களின் முன்னே
கைகட்டி நிற்கின்றது
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!