காதல் பிரிவு

உடனிருப்பாய் என்றிருந்தேன்

கடனென்று முறித்து விட்டாய் உறவை

மடமனது கேட்கவில்லை

மங்கையுனை மறக்கவில்லை

 

உதறிவிட்டாய் என்னை

உடும்பு நானென நீ யறியாய்

ஊடல் உறவுக்குள் சகஜம்

உணருமா உன் மனம்

 

பாராமுகம் காட்டுகிறாய்

பாவிமனம் துடிப்பதை நீ யறியாய்

மாறிவிடு என்னவளே இல்லையெனில்

மடிந்திடுவேன் நான் கண்ணே

– வ.முனீஸ்வரன்