கையில் ரோஜாவோடு
காத்திருந்தேன்
கண் பூத்திருந்தேன்
அவள் வருகைக்காக…
அவள் வந்தாள்
தலை நிறைய
மணக்க மணக்க
மல்லிகைப் பூவுடன்
தாமரைக் குளத்தருகே…
மழைக் குளிர்ச்சியில்
பூத்த டிசம்பர் பூக்கள்
தலையசைத்துப்
பூபாளம் பாடியது…
நேரம் ஓடியது
அந்தி சிவப்பு நிறத்தில்
சாமந்திப்பூ வானம்
மெல்ல சிரித்தது…
பன்னீர்பூக்கள்
படுக்கையில் அவள்
மடியில் நான் சாய,
அவள் தன் நீலாம்பல்
கண்களை மெதுவாக மூட…
எத்தனைப்பூக்கள்
இருந்தாலென்ன
அத்தனையும் அவள்
அழகிற்கு ஈடாகுமோ?
எத்தனை வாசம்
இருந்தாலென்ன
அத்தனையும்
அவள் சுகந்தத்திற்கு
ஈடாகுமோ?
ரோகிணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!