வானத்து மீனெல்லாம் வாசலுக்கு வரலாம்
கானக் குயிலுனக்கு கால்கொலுசாகலாம்
சேலத்து மாம்பழம் போல் சின்னநிலா ஆகலாம்
கோல விழியுனக்கு கொஞ்சம் பசியாற்றலாம்
சுட்டெரிக்கும் சூரியனும் சூடும் மலர் ஆகலாம்
கட்டிக் கரும்பே உந்தன் கார் கூந்தல் ஏறலாம்
சுற்றிவரும் தென்றல்கூட தெம்மாங்கு பாடலாம்
கற்கண்டே உன் காதில் காதல்கதை கூறலாம்
எட்டாத மாமலையும் இங்கு தங்கமாகலாம்
சிட்டே உன் இடைக்கு சின்ன நகையாகலாம்
உள்ளபடி எல்லாமே உன் உடலில் சேர்ந்தாலும்
உன் பார்வைமட்டும் காத்திருக்கும் என்னைத் தேடி
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!