எல்லா திசைகளிலும்
திரும்புகிறது அவன் மனம்
அது ஒரு காட்சியை
ஒரு பொருளை
ஒரு அர்த்தத்தை
எரியும் தீபத்தின்
ஒளியெனப் பாய்ச்சுகிறது
உடலைச் சுமந்த அவனுடன்
வீணான கணத்தில்
உலகுடன் பேசுவது யார்
பாதையை வடித்த நிர்ப்பந்தங்கள்
ஏற்றமும் இறக்கமுமாக
பயணத்தை நடத்தியது
இடைவிடாத வாழ்க்கை
துண்டிக்காத மின்சாரம்
ஓடும் நதி
கரையும் காலம் என
காத்திருந்தான்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!