முன்பொரு காலத்தில்
என்றெல்லாம் சொல்லக் கதைகளில்லை…
சில நாட்களுக்கு முன்னரே
சந்தித்துக் கொண்டோம் நீயும் நானும்…
நேற்றைய பொழுதுகளில்
இல்லாமல் இல்லை நீயும் நானும்
ஆனாலும் வெவ்வேறு திசை
திரிந்து பறந்தோம்!
தெரிந்திருக்க வாய்ப்பில்லை எவருக்கும்
என்னை நீயும் உன்னை நானும்
சந்திப்போம் என்று
நீயும் நானும் கூட
நினைத்திருக்க வழியில்லைதான்
அறியாத அவர்களைப் போலவே…
எனக்குள் எழுந்தபடி
உனக்குள்ளும் பரிமாறியபடி
விதைக்கப்பட்ட எதிர்பார்ப்புகள்
துளிர் விட்டுக் கொண்டே இருக்கின்றன
பரஸ்பரங்களைப் பரிமாறியபடி …
யாவருக்கும் தெரிந்திருக்கிறது
இப்போதெல்லாம்
என்னுடைய இக்காத்திருப்பு
யாருக்கானதென்று…
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!