காமராசர் பாட்டு

குழந்தைகள் பாடுவதற்கான அருமையான‌ காமராசர் பாட்டு இது.

விருதுநகர் தன்னிலே

வீரம் விளைந்த மண்ணிலே

விளைந்த பயிராம் காமராசர்!

 

இளவயதுக் கல்வியை

இழந்துவிட்ட போதிலும்

மனதின் வலிமை தன்னையே

மறந்து விட்டதில்லையே!

 

பத்திரிக்கை வாயிலாக

தெரிந்து கொண்டார் உலகினை!

உழைப்பால் உயர்ந்த உத்தமர்

முதல் அமைச்சராய் வந்தாரே!

 

வந்தபின்னர் ஓயவில்லை!

உறங்கவில்லை!

தொண்டு பல செய்தாரே!

தொடர்ந்து பல திட்டங்கள் தீட்டி

தொழில்துறையை வளர்த்தாரே!

 

ஏழைக்குழந்தையும்

ஏட்டுக் கல்வி பெற்றிட

இலவச உதவிகள் செய்தாரே!

கல்விக் கண்ணை திறந்தாரே

கடமையே கண்ணாக வாழ்ந்தாரே!

 

கண்டதில்லை இவரைப் போல்

கனிவு மிக்க தலைவரை!

உழைத்து உழைத்து ஓய்ந்ததால்

கடவுள் கொடுத்த ஓய்வினை

விரும்பி ஏற்று பறந்தாரே!

விண்ணுலகம் சென்றாரே!

 

செயல் வீரர் காமராசர் பாட்டு இது. சொல்லன்று செயலே சிறப்பென்று உணர்வோம்; செயல்படுவோம்.