காய்கறி சூப் செய்வது எப்படி?

காய்கறி சூப் என்பது காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சத்து நிறைந்த பானம். காய்கறிகளை உண்பதால் கிடைக்கும் சத்துக்களை காய்கறிகளினால் தயார் செய்யப்படும் சூப்பின் மூலம் பெறலாம்.

காய்கறிகளை உண்ண மறுக்கும் சிறுகுழந்தைகளுக்கு இந்த சூப்பினை தயார் செய்து தரலாம்.

வீட்டில் எளிமையாக அதே நேரத்தில் சுவையாக காய்கறி சூப் தயார் செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

கேரட் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
பீன்ஸ் – 6 எண்ணம்
பச்சைப்பட்டாணி – 20 எண்ணம்
முட்டைக்கோஸ் – 1 கைபிடி
சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
தக்காளி – 1 எண்ணம் (பெரியது)
கொத்த மல்லி – அலங்கரிக்க தேவையான அளவு
பாசிப்பருப்பு – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – 1½ ஸ்பூன்
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

 

செய்முறை

தேவையான காய்கறிகள்
தேவையான காய்கறிகள்

 

முதலில் கேரட்டை தோல் சீவி சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக வெட்டிக் கொள்ளவும்.

தக்காளியை நான்காக வெட்டிக் கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக அரிந்து கொள்ளவும்.

பாசிப்பருப்பு நறுக்கிய காய்கறிகளான கேரட், முட்டைக்கோஸ், தக்காளி, சின்னவெங்காயம் மற்றும் பச்சைபட்டாணி ஆகியவற்றை குக்கரில் போட்டு கலவை மூழ்குமளவுக்கு தண்ணீர் ஊற்றவும்.

காய்கறிகளை வேக வைக்கும் போது
காய்கறிகளை வேக வைக்கும் போது

 

பின் குக்கரை மூடி அடுப்பில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும். ஓரிரு நிமிடங்களில் அடுப்பை அணைத்து விடவும்.

சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து காய்கறி கலவையை வடிகட்டி விடவும். கலவைத் தண்ணீரை தனியே வைக்கவும்.

வடிகட்டிய காய்கறி கலவையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

மிக்சியில் வெந்த காய்காறிகளை அடிக்கும் போது

மிக்சியில் வெந்த காய்காறிகளை அடிக்கும் போது

 

பின் வடிகட்டிய கலவைத் தண்ணீருடன் அரைத்த காய்கறி விழுதைச் சேர்க்கவும்.

வடிகட்டிய தண்ணீர் மற்றும் காய்கறி கலவை
வடிகட்டிய தண்ணீர் மற்றும் காய்கறி கலவை

 

சூப்பை அடுப்பில் வைத்து அதனுடன் சீரகப் பொடியைச் சேர்த்து சூடேற்றவும். சுவையான காய்கறி சூப் தயார்.

சுவையான காய்கறி சூப்
சுவையான காய்கறி சூப்

 

பின் பறிமாறும் பொழுது தேவையான உப்பு தேவையான மிளகுத்தூள் மற்றும் அரிந்து வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை மேலே தூவி பறிமாறவும்.

இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் விரும்பிக் குடிப்பர்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் நெய் மற்றும் புதினா சேர்த்து சூப் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் பாசிப்பருப்புக்குப் பதிலாக துவரம் பருப்பைச் சேர்த்து சூப் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

One Reply to “காய்கறி சூப் செய்வது எப்படி?”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.