பால்யத்தில்
பழகிவிடும் செயலொன்று
அனிச்சையென
மாறுவதை
மரபணுக்களைப்
பொறுப்பாக்கும்
மாய வினோத
முடக்கு வாதங்களில்
மனம் ஆசுவாசம் கொள்வதான
செயற்கைகளின் செழுமைகளுக்கிடையில்…
பசப்பற்றப் பாசத்தில்
உள் நுழைந்த
ஒற்றை எண்ணம்
வளர்தலில்
வாய்த்த
பேரலையில்
வாரிச் சுருட்டிடாமல்
அலையாடி நுரைக்கிறது…
ஒட்டி நின்று
உறவாடும் நேசத்தில்
நெஞ்சை நனைத்து
நெகிழும் படியாக
குழந்தையெனக் கொஞ்சிய
பிள்ளை
சிறுமியாக மாறியபொழுதிலும்
மாறிடாத பண்பில்!
ரவி அல்லது
ravialladhu@gmail.com
(நன்றி: தோழி சிறுமி சார்ஜிமாவிற்கு)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!