கோடை விடுமுறையில் ‘கார் ஓட்ட கத்துக்க வேண்டும்’ என்ற தனது ஆசையை அம்மாவிடம் சொல்லி, அப்பாவிடம் சிபாரிசு செய்ய கெஞ்சி கேட்டான் பிளஸ் டூ படிக்கும் தனுஷ்.
அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய தனது கணவன் கேசவனிடம் மகனின் ஆசையை நாசுக்காய் சொன்னாள் தனுஷின் அம்மா பானு.
“கார் ஓட்ட கத்துகிறது நல்ல விஷயம் தான், நான் வேணாங்கல, அதுக்கு முன்னால அவன் கார் மெக்கானிக் ஷாப்ல கார் எப்படி சர்வீஸ் பண்றதுன்னு கத்துக்கிடட்டும். அதுக்கப்புறம் கார் ஓட்ட கத்துக்கலாம்.” கறாராய் சொன்னார் கேசவன்.
“என்னங்க அவன் என்ன கேட்கிறான்?
நீங்க என்ன பதில் சொல்றீங்க?
அவன் கார் ஓட்ட கத்துக்கவான்னு கேட்டா, நீங்க எப்படி சர்வீஸ் பண்றதுன்னு கத்துக்க சொல்றீங்க.
இது என்னங்க நியாயம்?” புரியாமல் கேட்டாள் பானு.
“கார் ஓட்ட கத்துக்கிறவங்க கார் ஓட்டுறத மட்டும் கத்துக்கிட்டு வண்டி ஓட்ட பழகிடுவாங்க, திடீர்னு கார்ல பிரச்சனை வந்தா நடு வழியில நிப்பாட்டி கார் மெக்கானிக்காக காத்திருக்கணும்.
அதுக்கு பதிலா கார் ஓட்டுறவங்க எப்படி சர்வீஸ் பண்றதுன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டா, எந்த மெக்கானிக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்ல. சட்டுன்னு கார சரி பண்ணி ஓட்டிகிட்டு வந்துடலாம், அதனாலதான் முதல்ல அவனை கார் சர்வீஸ் கத்துக்க சொன்னேன்”
அவர் சொல்வதில் நியாயம் இருப்பதை உணர்ந்து, முதலில் கார் சர்வீஸ்; அப்புறம் கார் ஓட்ட கத்துக்கலாம் என்று தன்மகனுக்கு அறிவுரை சொன்னாள் பானு.
M.மனோஜ் குமார்
சென்னை
கைபேசி: 9789038172