சாளரத்தை திறந்து விடச்சொல்லி முட்டி
மோதி முனகலுடன் நிற்கிறது காற்று
அவிழ்ந்து கொள்ளும் மொட்டுக்களின்
அந்தரங்க மகரந்தங்களை ஆர்ப்பாட்டமின்றி
தழுவி நழுவி செல்கிறது
தப்பற்றதாய் எப்போதும் அது
நீர்த்திவலைகளை உற்பத்தி செய்யும்
உடன்படிக்கையை உபாதையின்றி முடித்து
குளக்கரை தாவி குதூகலிக்கிறது
குழந்தையாகவே அது
வியர்வை பூக்களை வினோதமாய் பறித்து
மனிதமரங்களை குளிரூட்டியபடி
குழைந்தாடுகிறது அது
வனம் சுட்டெரிக்க வலுவாய் நின்றதை
எவ்வாறேனும் தவிர்த்திருக்கலாம்
சிறு பொறியுடனான கூட்டாட்சியை
பிழைக்காற்று!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250