எத்தனை பந்துகளை தடுத்தாலும்
எவரும் பாராட்டுவதில்லை
வலையின் முன் காவலிருக்கும்
இந்த வீரனை…
ஒரு பந்தை உருள விட்டாலும்
ஊர் கூடி விமர்சனம் செய்யும்!
ஓராயிரம் குற்றம் சுமத்தும்!
இது தான் அரசு அலுவலரின் பணியிடமும்
சிறு சறுக்கலும் உயரதிகாரிகளால் ‘வறுத்தெடுக்கப்படும்’
அப்பொழுது தான் தெரியும்
உண்மையான அலுவலக நட்பு எதுவென…
காலம் சிலவற்றை காயங்களுடனே
கற்றுக் கொடுக்கும்
கலங்காது நாமும் கற்றுக்கொள்வோம்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942