காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி

காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி

காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி

காற்றைப்போல நீரைப்போல அவர்களடி

வாழும் பூமி மகிழ்ச்சியிலே சிலிர்க்கும்படி

வாழ்த்த வேண்டும் போற்ற வேண்டும்

மகளிர் தினம்!

ஆலகாலவிஷம் சூழ வாழ்ந்திடினும்

அன்னையவள் அரவனைப்பில் அமுதமாகும்

நீலவானும் வெண்ணிலவும் தோற்று ஓடும்

நித்தம் நம்மை காக்கும் பெண்மை போற்றிடணும்

மேலான அன்பின் எல்லை பெண்களடி

மேன்மையான செல்வமெல்லாம் பெண்களடி

வீழாத வீரமெல்லாம் பெண்களடி

விண்ணும் மண்ணும் அதிர இன்று போற்றிடணும்

மகளிர் தினம்!

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942