ஆண் :ஆளக்கொல்லும் ஆலகாலம்
கண்ணில் வச்சவளோ -இந்த
அத்தானையே நெஞ்சுக்குள்ள
அடச்சி தைச்சவளோ !
பெண் :நூலிழையாய் நெருங்கிருக்க
ஆசை கொள்பவனோ -நிதம்
நூதனமாய் சாதனைகள்
செய்து வெல்பவனோ !
ஆண் :கரும்பு போல இனிக்கும்சுவை
கொடுக்க வந்தவளோ- கை
தொடுத்தமாலை எடுத்துசாத்த
காத்து நின்னவளோ !
பெண் :அரும்புமீசை குறும்புபார்வை
அழகு மச்சானோ- இந்த
ஆயிரமீனை பிடிக்க கண்ணி
வலைய வச்சானோ!
ஆண் :ஆலம்பூவு சீலை கட்டி
அளந்து நடக்குற- என்
ஆறடியும் அனல் உடுத்த
அகவல் படிக்கிற !
பெண் :தாளும்எழுது கோலுமின்றி
கவி கொடுக்கிற -அதை
தளிர் மேனியில் அரங்கேற்ற
துடிதுடிக்கிற !
ஆண் :கஞ்சிகலையம் சுமக்கும் பெண்ணா
கச்சிதமாய் இருக்க- என்னை
கட்டி அணைச்சி ஒண்ணு கொடுத்தா
சூடு தணிந்திருப்பேன் !
பெண் :வஞ்சி கழுத்துல வந்து விழட்டும்
மஞ்ச தாலிதான் -நாம்
கொஞ்சிடுவோம் அப்போது
கொஞ்சம் பொறுமை இப்போது !
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250