புனிதர் ஏசு பிறந்த நாளிதை
பூக்களை வைத்துக் கொண்டாடிடுவோம்
இனிஇங்கு துயரில்லை எல்லாம் அவனருள்
என்றே போற்றிப் பாடிடுவோம்.
மனிதரில் தீயவர் எவருமே இல்லை
என்பதே இயேசுவின் பொன் மொழியாம்
கனிந்த மனத்தால் காண்பவை யாவுமே
கனியன்றி காயில்லை என்று உணர்வோம்
பிணிகளே இல்லா உயிர்கள் பூமியில்
பிறந்திட வழி வகை செய்திடுவோம்
அணி அணியாக அனைவரும் இசையோடு
ஆண்டவர் இயேசுவைப் போற்றிடுவோம்
பனிமலை மாதா பேரருள் துணையுடன்
பரம பிதாவுடன் ஜெயித்திடுவோம்
இனியெல்லாம் சுகமே, வாழ்வெல்லாம் இனிதே
என இயற்கையும் துணைவர வேண்டிடுவோம்.
– இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்